முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் கரோனா பலி எண்ணிக்கை 1,362 ஆக உயர்வு

தெலங்கானாவில் இன்று புதிதாக 1,539 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த நாட்டில் மொத்த பாதிப்பு 2,45,682 ஆக உயர்ந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:48 PM
Telangana adds 1,539 new COVID-19 cases, 5 deaths push toll to 1,362
பகிர்:

தெலங்கானாவில் இன்று புதிதாக 1,539 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த நாட்டில் மொத்த பாதிப்பு 2,45,682 ஆக உயர்ந்துள்ளது. 

நாட்டில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தெலங்கானாவில் இன்றைய பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, இன்று தெலங்கானாவில் புதிதாக 1,539 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதித்து 5 பேர் பலியாகியுள்ளதை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 1,362 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், தொற்று பாதித்த 18,656 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 15,864 பேர் வீட்டிலும், பல்வேறு நிறுவனங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து, தெலங்கானாவில் குணமடைந்தோர் விகிதம் 91.85 ஆக உயர்ந்துள்ளது. 

நவம்பர் 3-ம் தேதி 44,327 சோதனைகள் மேற்கொண்ட நிலையில், மொத்தம் இதுவரை 44,84,183-கும் அதிகமான கரோனா சோதனைகளை மேற்கொண்டுள்ளன என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.