முகப்பு
இந்தியா

பட்டாசு வெடிக்கும் மக்கள்: தில்லியில் மோசமடையும் காற்று மாசு

தில்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள்குறைந்து இன்று மோசமான நிலையை எட்டியுள்ளதாக தில்லி காற்று தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:48 PM
தீபாவளியையொட்டி பட்டாசு வெடிப்பு: தில்லியில் மோசமடையும் காற்று மாசு
பகிர்:

நாட்டின் தலைநகரான தில்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள்குறைந்து இன்று மோசமான நிலையை எட்டியுள்ளதாக தில்லி காற்று தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

தில்லியில் காற்று மாசு மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் தில்லி அரசு சார்பில் மரக்கன்றுகளை நட்டு காடுகளை வளர்த்தல், சாலைகளில் தண்ணீர் தெளித்தல், போக்குவரத்து சிக்னலில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகளை எரிக்க வேண்டாம் என்று தில்லி அரசு சார்பில் தொடர்ந்து வேண்டுகோள் வைக்கப்பட்டு வருகிறது.

எனினும் தில்லியில் காற்றின் மாசு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மக்கள் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கியதே காற்று மாசிற்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தில்லியின் ஆனந்த் விஹார் பகுதியில் காற்றின் தர அட்டவணையில் 422 புள்ளிகள் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக துவாரகா பகுதியில் 421, ஆர்.கே.புரத்தில் 407-ஆக பதிவாகியுள்ளது. இவை காற்றின் தரம் மோசமடைந்துள்ளதைக் காட்டுவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

குருகிராம் பகுதியில் மக்கள் மூச்சு விடுவதற்கு கூட சிரப்படுவதாகவும், நேற்று நிலைமை மோசமடைந்தும் குப்பைகள் எரிப்பதையும், பட்டாசு வெடிப்பதையும் சில மக்கள் நிறுத்தவில்லை என்று குருகிராம் பகுதியை சேர்ந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →