முகப்பு
இந்தியா

பிகார்: வாக்காளர்களுக்காக தற்காலிக பாலம் அமைத்த உள்ளூர் மக்கள்

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் வாக்களிக்க வசதியாக முசாஃபர்பூரில் நீரோடையை கடக்கும் வகையில் உள்ளூர் மக்களே இணைந்து தற்காலிக பாலம் அமைத்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
பிகார்: வாக்காளர்களுக்காக தற்காலிக பாலம் அமைத்த உள்ளூர் மக்கள்
பகிர்:

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் வாக்களிக்க வசதியாக முசாஃபர்பூரில் நீரோடையை கடக்கும் வகையில் உள்ளூர் மக்களே இணைந்து தற்காலிக பாலம் அமைத்துள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து மக்களும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அப்பகுதி மக்கள் இணைந்து தற்காலிக பாலத்தை அமைத்துள்ளனர்.

மாநிலத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள 19 மாவட்டங்களுக்கு உள்பட்ட 78 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தோ்தலில், சட்டப் பேரவைத் தலைவா் விஜயகுமார் சௌதரி, மாநில அமைச்சா்கள் 10 போ் உள்பட மொத்தம் 1,204 போ் களத்தில் உள்ளனா். 

வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், முசாஃபர்பூர் பகுதியில் உள்ள மக்கள் நீரோடையை கடக்கும் வகையில் தற்காலிக பாலத்தை அமைத்துள்ளனர்.

இது குறித்து உள்ளூர் மக்களில் ஒருவர் பேசியதாவது, ''நீரோடையைக் கடக்க இந்தப் பகுதியில் பாலம் இல்லை. இதனால் கட்டைகளைக் கொண்டு உள்ளூர் மக்கள் இணைந்து தற்காலிக பாலத்தை அமைத்துள்ளோம். அதிக அளவிலான மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →