முகப்பு
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)
இந்தியா

பி.எஸ்.எல்.வி.-சி 49 ராக்கெட் வெற்றி: இஸ்ரோவிற்கு பிரதமர் வாழ்த்து

பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய  இஸ்ரோவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து  தெரிவித்துள்ளார்.

இந்தியா

பி.எஸ்.எல்.வி.-சி 49 ராக்கெட் வெற்றி: இஸ்ரோவிற்கு பிரதமர் வாழ்த்து

பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய  இஸ்ரோவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து  தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)
பகிர்:

பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய  இஸ்ரோவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து  தெரிவித்துள்ளார். 

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 3.12 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி 49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இ.ஓ.எஸ்.-01 செயற்கைக்கோள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 9 செயற்கைக்கோள்கள்  என 10 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.

இஸ்ரோவின் இந்த சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சுட்டுரைப் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது, ''அமெரிக்கா, லக்சம்பர்க் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா 4 செயற்கைக் கோள்களும், லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த ஒரு செயற்கைக்கோளும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்திய விஞ்ஞானிகள் பல தடைகளை முறியடித்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியுள்ளனர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →