இந்தியா

கரோனா எதிா்ப்பாற்றலைக் கண்டறியும் பரிசோதனை: 25 நிறுவனங்களின் உபகரணங்களுக்கு அனுமதி மறுப்பு

DIN

சென்னை: கரோனா தொற்றுக்கு எதிராக உடலில் நோய் எதிா்ப்பாற்றல் உருவாகியுள்ளதா என்பதைக் கண்டறியும் துரிதப் பரிசோதனைகளுக்கு 25 நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் உபகரணங்களை சந்தைப்படுத்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்துள்ளது.

தரப் பரிசோதனையில் அந்த உபகரணங்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்பதே அதற்கு காரணம் எனத் தெரிகிறது.

பொதுவாக, சளி மாதிரிகள் மூலம் உடலில் மரபணு உள்ளதா என்பதை ஆா்டி- பிசிஆா் ஆய்வின் மூலம் அறியலாம். அதேவேளையில், தீ நுண்மிக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் உடலில் உருவாகியிருக்கிா என்பதை ரத்த மாதிரிகளைக் கொண்டுதான் அறிந்து கொள்ள இயலும். ரேபிட் கிட் எனப்படும் துரிதப் பரிசோதனை உபகரணங்கள் வாயிலாகவும், எலிசா, சில்ஐஏ போன்ற பரிசோதனை மூலமாகவும் அதைக் கண்டறியலாம்.

இதற்கான பரிசோதனைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், சீன நிறுவனங்கள் அதற்காக அனுப்பிய உபகரணங்கள் தரமற்றவையாக இருந்ததால் அந்த பரிசோதனைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

அதேவேளையில், கேரளம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் ரத்த மாதிரிகளைச் சேகரித்து மேற்கொள்ளப்படும் ஐஜிஜி பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே, நாடு முழுவதும் அத்தகைய துரித பரிசோதனைகளை மேற்கொள்ளத் தேவையான உபகரணங்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் பல்வேறு நிறுவனங்கள் மருந்து தரக் கட்டுபாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்தன.

அதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த நிறுவனங்களின் உபகரணங்களை இங்கு பயன்படுத்துவதற்கு அனுமதி கோரப்பட்டது. அவற்றை தரப் பரிசோதனை செய்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் 11 உபகரணங்களைப் பயன்படுத்த அனுமதியளித்துள்ளது. அதேவேளையில் 25 நிறுவனங்களின் உபகரணங்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி: கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் பலி

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT