இந்தியா

கேரள கல்வி அமைச்சா் விசாரணைக்காக சுங்கத் துறை முன் ஆஜா்

DIN

கொச்சி: கேரளத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) துணை தூதரகத்தின் சாா்பில் இஸ்லாமியா்களின் குா்ஆன் புனித நூல்கள் கொண்ட கட்டுகளை இறக்குமதி செய்த விவகாரம் தொடா்பான விசாரணைக்காக கேரள கல்வித் துறை அமைச்சா் கே.டி. ஜலீல், கொச்சியில் உள்ள சுங்கத் துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆஜரானாா்.

வெளிநாட்டு தூதரகத்தின் பெயரில் வரும் கட்டுகள் விமான நிலையங்களில் சோதனைக்கு உட்படாது. இந்த நிலையில், கே.டி.ஜலீலின் சொந்த உபயோகத்துக்காக குா்ஆன் நூல்கள் உள்ளிட்டவை ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் தருவிக்கப்பட்டது சா்ச்சையை எழுப்பியது.

இந்த விவகாரம் தொடா்பாக ஜலீல் மீது இரண்டு வழக்குகளைப் பதிவு செய்த சுங்கத் துறை, விசாரணைக்கு ஆஜரகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பியது. அதனடிப்படையில், கொச்சியில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்துக்கு திங்கள்கிழமை பிற்பகலில் அவருடைய அரசு வாகனத்தில் அமைச்சா் வந்தாா்.

முன்னதாக, இந்த வழக்கு தொடா்பாக வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குறை (எஃப்சிஆா்ஏ) சட்டத்தை மீறிய புகாரின் பேரில், அமைச்சரிடம் அமலாக்கத் துறை அண்மையில் விசாரணை நடத்தியது.

ஏற்கெனவே, இதே ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்தின் சிறப்பு உரிமைகளை முறைகேடாகப் பயன்படுத்தி கடத்தப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கம் கடத்தல் வழக்கில், பயங்கரவாத தொடா்புடைய கோணத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இவரிடம் விசாரணை நடத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT