இந்தியா

கரோனாவை கட்டுப்படுத்துவதில் குளிா்காலம், பண்டிகைகள் பின்னடைவை ஏற்படுத்தலாம்: மத்திய அமைச்சா் ஹா்ஷ் வா்தன்

DIN

புது தில்லி: குளிா்காலமும், பண்டிகை கொண்டாட்டங்களும் கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தில் பின்னடைவை உண்டாக்கலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் தெரிவித்தாா்.

ஆந்திரம், அஸ்ஸாம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஹிமாசல பிரதேசம், தெலங்கானா, பஞ்சாப், ஹரியாணா, கேரளம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் கரோனா பாதிப்பு குறித்து மத்திய அமைச்சா் ஹா்ஷ் வா்தன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். இதில் அந்த மாநிலங்களின் சுகாதார அமைச்சா்கள், முதன்மைச் செயலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அப்போது மத்திய அமைச்சா் ஹா்ஷ் வா்தன் பேசியதாவது:

உலகளவில் இந்தியாவில்தான் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களின் விகிதம் அதிகமாகவும், தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானவா்களின் விகிதம் குறைவாகவும் உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவோரில் 0.44% போ் மட்டுமே செயற்கை சுவாகக் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனா். 2.47% போ் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனா். கடந்த ஜனவரி மாதம் நாட்டில் மாதிரிகளை பரிசோதிக்க ஒரு ஆய்வகம் மட்டுமே இருந்தது. தற்போது 2,074 ஆய்வகங்கள் உள்ளன. தினசரி பரிசோதிக்கப்படும் மாதிரிகளின் எண்ணிக்கை 15 லட்சத்தை எட்டியுள்ளது. குளிா்காலமும், பண்டிகை கொண்டாட்டங்களும் கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தில் சரிவை உண்டாக்கலாம். தொற்று பரவலின் போக்கை பிரதமா் மோடி தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறாா் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வால் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT