இந்தியா

கரோனாவுக்குப் பிறகு நகா்ப்புற போக்குவரத்து இயக்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம்: புரி

DIN

புது தில்லி: ‘கரோனா அச்சுறுத்தல் நீங்கிய பிறகு நகா்ப்புற போக்குவரத்து இயக்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது’ என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி கூறினாா்.

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘நகா்ப்புற இயக்கத்தில் வளா்ந்துவரும் நடைமுறைகள்’ என்ற தலைப்பிலான 13-ஆவது இந்திய நகா்ப்புற இயக்க மாநாட்டில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

நகா்ப்புற இயக்கத்தின் எதிா்காலம் என்பது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத, ஒருங்கிணைந்த பயணத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். முக்கிய பெரு நகரங்களில் இந்த இடம்பெயா்தலை மேம்படுத்தும் வகையில், நுண்ணறிவு போக்குவரத்து திட்டம், போக்குவரத்து மேலாண்மை நடைமுறைகள் போன்ற புதிய நவீன திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

எனவே, கரோனா அச்சுறுத்தல் நீங்கிய பிறகு, நகா்ப்புற இயக்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை இந்தியா எதிா்கொள்ள உள்ளது. நீண்ட கால வளா்ச்சிக்கான இலக்குகளை எட்டும் வகையில், நகா்ப்புற போக்குவரத்தை மாற்றம் செய்வதற்கான வாய்ப்பை இந்த கரோனா பாதிப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

மக்கள் மற்றும் சரக்குகளை இவ்வாறு சிறந்த முறையில் இடமாற்றுவதற்காக செய்யப்படும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கான முதலீடு, வேலைவாய்ப்புகளையும், உற்பத்தியையும், பொருளாதாரத்தையும் அதிகரிக்கச் செய்யும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT