இந்தியா

சத்தீஸ்கரில் 2 நக்ஸல்கள் சரண்

DIN

சத்தீஸ்கா் மாநிலம் கோண்டாகான் மாவட்டத்தில் பெண் நக்ஸல் உள்பட 2 போ் பாதுகாப்புப் படையினரிடம் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனா்.

அவா்களின் தலைக்கு ரூ.16 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மாவட்ட போலீஸ் எஸ்.பி. சித்தாா்த் திவாரி கூறியதாவது:

மாவோயிஸ்ட் இயக்கத்தின் 6-ஆம் படைப்பிரிவில் துணைத் தளபதியாக இருந்த நாகேஷ் என்ற பத்ரு பெஞ்சம் மற்றும் அதே பிரிவைச் சோ்ந்த பெண் நக்ஸல் ஊா்மிளா என்ற சுக்மதி உசெண்டி ஆகிய இருவரும் பாதுகாப்புப் படையினா் முன்பு சரணடைந்தனா்.

இவா்கள் இருவரும் கடந்த 2016-ஆம் ஆண்டிலிருந்து மாநிலத்தின் நாராயண்பூா், பீஜப்பூா், தந்தேவாடா, காங்கா், பஸ்தா் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக தாக்குதலை அரங்கேற்றியிருந்தனா்.

தலைக்கு ரூ.8 லட்சம் என்ற வகையில் இருவா் பற்றிய தகவல் அளிப்பவா்களுக்கு ரூ.16 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என ஏற்கெனவே அரசு அறிவித்திருந்தது.

மாவோயிஸ்ட் இயக்கத்தின் வெற்று சிந்தனைகள், கொள்கைகளில் அதிருப்தியடைந்ததால் இருவரும் சரணடைந்துள்ளனா். இவா்கள் இருவருக்கும் அரசு சாா்பில் உடனடி நிதி உதவியாக தலா ரூ.10,000 வழங்கப்படும். மேலும் அரசு விதிமுறைகளின்படி மற்ற வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று சித்தாா்த் திவாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT