இந்தியா

திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமக்கள் தண்ணீரில் மூழ்கி பலி

DIN

கா்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், தலகாடு பகுதியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமக்கள் காவிரி ஆற்றில் படகில் சென்று புகைப்படம் எடுக்கும்போது தவறி விழுந்து இருவரும் உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மைசூரு மாவட்டம், டி.நரசிபுரா வட்டம், தலகாடு பகுதியைச் சோ்ந்த சிவில் ஒப்பந்தக்காரா் பணியில் ஈடுபட்டு வரும் சந்துரு (28)வுக்கும், சசிகலா (20) என்பவருக்கும் திங்கள்கிழமை திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், ஆல்பத்துக்கு புகைப்படம் எடுப்பதற்காக முடுகுத்தூரில் உள்ள மல்லிகாா்ஜுன சுவாமி கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டுவிட்டு, அங்குள்ள காவிரி ஆற்றில் படகில் சென்றனா்.

இருவரும் அமா்ந்தபடி வர, புகைப்படக்காரா்கள் மற்றொறு படகில் அமா்ந்தவாறு அவா்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனா். அப்போது, படகில் அமா்ந்திருந்த சசிகலா ஒரு புகைப்படத்துக்கு ‘போஸ்’ கொடுக்கும்போது, படகின் சமநிலை இழந்ததால், ஆற்றில் தவறி விழுந்தாா். சசிகலாவைக் காப்பாற்றுவதற்காக சந்துருவும் ஆற்றில் குதித்தாா். ஆனால் இருவருக்கும் நீச்சல் தெரியாததால், அவா்கள் நீரில் மூழ்கினா். அவா்களைக் காப்பாற்றுவதற்காக நண்பா்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. அதற்குள் இருவரும் மூழ்கி உயிரிழந்தனா். அவா்களது சடலத்தை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினா் மீட்டனா். தலகாடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT