திருவனந்தபுரத்தில் பட்டாசுகள் வெடிக்கக் கட்டுப்பாடு 
இந்தியா

திருவனந்தபுரத்தில் பட்டாசுகள் வெடிக்கக் கட்டுப்பாடு

அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகளின் காரணமாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பட்டாசுகள் வெடிக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

DIN

அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகளின் காரணமாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பட்டாசுகள் வெடிக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்று பாதிப்பின் மத்தியில் தீபாவளி பண்டிகை வருவதால் பட்டாசுகள் வெடிப்பது குறித்து பல்வேறு மாநில அரசுகளும் கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன.

இந்நிலையில் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாடு குறித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும், கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு ஆகிய நாள்களில் நள்ளிரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

முன்னதாக மேற்குவங்கம், ராஜஸ்தான், ஒடிசா, சிக்கிம், சண்டிகர் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடையும், மும்பை மற்றும் உத்தரப்பிரதேசத்தில் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

திருப்பூரில் சதித் திட்டம்! தில்லி குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களா? 8 பேரை கைது செய்த தில்லி போலீஸ்!!

SCROLL FOR NEXT