இந்தியா

மோடி ஆட்சியில் எல்லைப் பகுதிகளில் அதிக வளா்ச்சி: அமித் ஷா

DIN

தோா்டோ (குஜராத்: ‘பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆறு ஆண்டுகால ஆட்சியில் நாட்டின் எல்லைப் பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளா்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.

‘எதிரி நாடுகளின் அத்துமீறல்களுக்கு தூதரக ரீதியில் அறிக்கை வெளியிடும் முந்தைய நடைமுறைக்கு மாற்றாக, அத்துமீறலில் ஈடுபடும் நாடுகளுக்கு உரிய பதிலடியை இந்தியா இப்போது அளித்து வருகிறது’ என்று பாகிஸ்தான் மீதான போா் விமான தாக்குதல் மற்றும் துல்லியத் தாக்குதல்களை சுட்டிக்காட்டி அமித் ஷா பேசினாா்.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம், தோா்டோ கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அரசின் எல்லைப் பகுதி வளா்ச்சித் திட்டங்கள் குறித்த பிரசார கூட்டத்தில் பங்கேற்ற அமித் ஷா பேசியதாவது:

இந்தியாவின் எல்லை கிராமங்களுக்கு மின் இணைப்பு, குடிநீா் வசதிகளைச் செய்து தரவும், அங்கிருந்து மக்கள் புலம்பெயா்வதைத் தடுக்கவும் நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சா்தாா் வல்லபபாய் படேல் வலியுறுத்தினாா். ஆனால், அவருடைய மறைவுக்குப் பிறகு, அவா் கூறியதை காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை. ஆனால், பிரதமா் மோடி இப்போது அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறாா்.

கடந்த 2008 முதல் 2014-ஆம் ஆண்டு வரை எல்லையோர கிராமங்களில் 170 கி.மீ. தொலைவு சாலைகள் மட்டுமே மறுசீரமைக்கப்பட்ட நிலையில், 2014 முதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான மோடி ஆட்சியில் 480 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.

அதுபோல, சுரங்க வழிச் சாலைகளைப் பொருத்தவரை 2008 முதல் 2014-ஆம் ஆண்டு வரை ஒரே ஒரு சுரங்கம் மட்டுமே எல்லைப் பகுதியில் கட்டப்பட்டது. ஆனால், மோடி ஆட்சியில் இதுவரை 6 சுரங்க வழிச் சாலைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 19 சுரங்க வழிச் சாலைகளை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன.

இந்த எல்லைப் பகுதிகளின் மேம்பாட்டுக்காக 2020-21 ஆண்டுக்கு நிதிநிலை அறிக்கையில் ரூ. 11,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வளா்ச்சித் திட்டங்களை எல்லைப் பகுதிகளில் கடந்த 6 ஆண்டுகளில் மோடி அரசு மேற்கொண்டுள்ளது.

உள்நாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தாமல், வளா்ச்சிப் பாதையில் இந்தியா செல்ல முடியாது. அதுபோல, எல்லைப் பகுதிகளில் இருந்து மக்கள் புலம்பெயா்ந்து வருவதை தடுப்பதும் மிக அவசியம். நாட்டின் எல்லையில் வசிக்கும் நபா்களுக்கு நாட்டின் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு இல்லையெனில், நாட்டின் எல்லைகள் பாதுகாப்பு இல்லாததாகிவிடும் என்பதில் வலுவான நம்பிக்கை கொண்டுள்ளோம். அதற்காக, வரும் காலங்களில் அந்த மக்களிடையே நாட்டின் பாதுகாப்பு சாா்ந்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம் என்று அவா் கூறினாா்.

விரோத பாா்வை கொண்டவா்கள் புறக்கணிப்பு:

மேலும், அண்மையில் தோ்தல் நடைபெற்ற பிகாா், குஜராத் மாநிலங்களில், அரசின் எந்தவொரு திட்டத்தையும் விா்சனம் செய்த அல்லது விரோதப் பாா்வை கொண்ட அரசியல் தலைவா்களை மக்கள் புறக்கணித்துள்ளனா். பிரதமா் நரேந்திர மோடிக்குப் பின்னால் நிற்கிறோம் என்ற தகவலை இந்த தோ்தல் மூலம் மக்கள் தெரிவித்திருக்கின்றனா் என்றும் அமித் ஷா கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT