'ஆலோசனைக்குப் பிறகே கர்நாடகத்தில் பள்ளிகள் திறக்கப்படும்'
கர்நாடகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து வல்லுநர்களுடனான ஆலோசனைக்குப் பிறகே முடிவு செய்யப்படும் என்று அந்த மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து வல்லுநர்களுடனான ஆலோசனைக்குப் பிறகே முடிவு செய்யப்படும் என்று அந்த மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. அனைத்துத் தரப்பிலும் ஆலோசனை நடத்தி வல்லுநர்களின் பரிந்துரைகளைப் பொறுத்தே முடிவு செய்யப்படும் என்று கூறினார்.
கர்நாடகத்தில் 30,762 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 8,11,581 பேர் தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,453-ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனாவால் மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்கள் படிப்படியாக மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன.
ஆந்திரப்பிரதேசத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து உத்தரகண்ட், பஞ்சாப் மாநிலங்களும் உயர்நிலை மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறந்தன.
திரிபுராவில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 50 சதவிகித ஆசிரியர்களுடன் திறந்தவெளி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.