இந்தியா

பிகார் எம்எல்ஏக்களில் 70% பேர் குற்றப்பின்னணியுடையவர்கள்

DIN


பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்து, ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குச் செல்லும் எம்எல்ஏக்களில் சுமார் 70 சதவீதம் பேர் குற்றப்பின்னணியுடையவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

பிகாா் சட்டப் பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 243 இடங்களில் 125-யை அக்கூட்டணி கைப்பற்றியது. அதில் பாஜக 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன.

243 எம்எல்ஏக்களில் 68 சதவீதம் பேர் அதாவது 163 பேர் மீது கொலை முதல் கொலை முயற்சி, ஆள் கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

லாப நோக்கமற்ற அமைப்பான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களை விட இந்த ஆண்டு 10 சதவீதம் கூடுதலாக 163 எம்எல்எக்கள் குற்றப் பின்னணியுடையவர்களாக உள்ளனர். இவர்களில் 123 பேர் மீது மிக மோசமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 19 பேர் மீது கொலை வழக்கும், 31 எம்எல்ஏக்கள் மீது கொலை முயற்சி வழக்கும், 8 பேர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கும் பதிவாகியுள்ளது.

74 இடங்களில் வெற்றி பெற்ற ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் 54 எம்எல்ஏக்கள் குற்றப்பின்னணி கொண்டவர்களாகவும், 73 எம்எல்ஏக்களில் குற்றப் பின்னணி கொண்ட 47 எம்எல்ஏக்களை பாஜகவும் கொண்டிருக்கிறது.

243 பேரில் 241 பேரின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட மற்ற இருவரின் பிரமாணப் பத்திரங்களும் தெளிவாக இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT