முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேலும் 105 பேர் கரோனாவுக்கு பலி

மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் மேலும் 105 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் குணமடைவோர் விகிதமும் குறைந்து வருகிறது.

Updated On : 14 நவம்பர், 2020 at 9:08 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:22 PM


மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் மேலும் 105 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் குணமடைவோர் விகிதமும் குறைந்து வருகிறது.

105 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 45,914 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் புதிதாக 4,237 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 17,44,698 ஆக உயர்ந்துள்ளது.

அங்கு குணமடைவோர் விகிதம் 92.41 சதவிகிதத்திலிருந்து 92.48 சதவிகிதமாகியுள்ளது. எனினும் இறப்பு விகிதம் 2.63 சதவிகிதமாக உள்ளது.

Advertisement

அதேசமயம் 2,707 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 16,12,314 பேர் குணமடைந்துள்ளனர். 85,503 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.