இந்தியா

தில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம்: கேஜரிவால் அழைப்பு

DIN


தில்லியில் நாளை (வியாழக்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

தில்லியில் கரோனா பாதிப்பு 3-ம் அலை வீசிக் கொண்டிருக்கிறது. இதனால், கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து காணப்படுகிறது. எனினும், 3-ம் அலையின் உச்சத்தைக் கரோனா கடந்துவிட்டதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இந்த வார தொடக்கத்தில் தெரிவித்தார். பாதிப்பு அதிகரிப்புக்கு மத்தியிலும் மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்தும் திட்டம் இல்லை என்பதை அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. மத்திய அரசு தரப்பிலும் தில்லிக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தில்லியில் நிலவும் கரோனா சூழல் குறித்து ஆலோசனை நடத்த முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நாளை காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT