முகப்பு
இந்தியா

இந்தூரில் நகைக்கடை ஷோரூமில் 31 பணியாளர்களுக்கு கரோனா

இந்தூரில் நகைக்கடை ஷோரூம் ஒன்றில் 31 பணியாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 19 நவம்பர், 2020 at 8:24 PM
கோப்புப் படம்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:24 PM

இந்தூரில் நகைக்கடை ஷோரூம் ஒன்றில் 31 பணியாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து இந்தூர் மாவட்ட ஆட்சியர்(பொறுப்பு) அஜய் தேவ் சர்மா கூறுகையில், இந்தூரில் நகைக்கடை ஷோரூமில் பணியாற்றிய 31 பணியாளர்களில் 20 பணியாளர்களுக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மீதமுள்ள 11 பணியாளர்களுக்கு இன்று தொற்று உறுதியாகியுள்ளது. 

தகவல் கிடைத்தவுடன் ஷோரூம் தற்காலிகமாக மூடப்பட்டது. அதைத்தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் ஷோரூமிற்கு சென்று கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தினா். சமீபத்திய நாளாக ஷோரூமிற்கு வருமைபுரிந்த வாடிக்கையாளர்கள் கண்டறியப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றார். 

Advertisement

மேலும் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி ஷோரூம் 7 நாள்கள் மூடப்பட்டு கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.