ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்: குழந்தை உள்பட 7 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு நகரமான குண்டூஸில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலியாகியுள்ளனர். 6-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
7 civilians including women, children killed in mortar attack in Kunduz
ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு நகரமான குண்டூஸில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலியாகியுள்ளனர். 6-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
குண்டூஸ் நகரில் உள்ள தலோகா பகுதியில் புதன்கிழமை இரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பொதுமக்கள் வசிக்கும் வீடுகளில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், குழந்தைகள், பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
சமீப காலமாகவே, இமாம் சாஹிப், டாஷ்-இ-ஆர்ச்சி மாவட்டம் மற்றும் குண்டூஸ் நகரத்தில் ஆப்கானிய பாதுகாப்புப் படையினருக்கும், தலிபான்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடைபெற்று வருகின்றது.
இந்த சம்பவம் குறித்து தலிபான் தீவிரவாதிகள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
தோஹாவில் அமைதி முயற்சிகள் தொடர்ந்தாலும் நாட்டில் வன்முறை அதிகரித்துள்ளது.