முகப்பு
இந்தியா

'கரோனாவுக்கு பலியான முன்கள வீரர்களின் வாரிசுகளுக்கு 5 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு'

முன்கள வீரர்களின் வாரிசுகளுக்காக, 5 எம்பிபிஎஸ் மருத்துவ சேர்க்கை இடங்களை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:54 PM
'கரோனாவுக்கு பலியான முன்கள வீரர்களின் வாரிசுகளுக்கு 5 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு'
பகிர்:


புது தில்லி: கரோனாவுக்கு எதிரான போரில் தொற்று பாதித்து உயிரிழந்த முன்கள வீரர்களின் வாரிசுகளுக்காக, 5 எம்பிபிஎஸ் மருத்துவ சேர்க்கை இடங்களை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறுகையில், கரோனாவுக்கு எதிரான போரில் நாட்டுக்காக முன்களத்தில் நின்று போராடி உயிரை நீத்த வீரர்களை கௌரவிக்கும் வகையில், அவர்களது வாரிசுகளுக்கு எம்பிபிஎஸ் மருத்துவ இடங்களை வழங்கும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதற்காக, நாடு முழுவதும் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில், மத்திய அரசின் கீழ் இருக்கும் எம்பிபிஎஸ் மருத்துவ சேர்க்கை இடங்களில், புதிதாக கரோனா முன்கள வீரர்களின் வாரிசுகளுக்கு என புதிய உள் ஒதுக்கீட்டு முறையை உருவாக்க வழிகாட்டு நெறிமுறை அனுப்பப்பட்டுள்ளது.

சுயநலமின்றி, நாட்டுக்காக பணியாற்றிய மருத்துவ முன்களப் பணியாளர்களின் உயிர்தியாகத்தை கௌரவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டிருப்பதாக ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →