ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி
செளதி அரேபியாவில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளதாக வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
செளதி அரேபியாவில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளதாக வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் செளதி அரேபியா தலைமையில் 21 ஆம் நூற்றாண்டில் அனைவருக்குமான வாய்ப்புகளை உணர்ந்துகொள்வது என்ற கருப்பொருளின் கீழ் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் பங்கேற்கும் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பை செளதி மன்னர் சல்மான் பின் அப்துல்ஸீஸ் அல் சவுத் விடுத்திருந்தார்.
இந்நிலையில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி கலந்து கொள்வார் என வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா வியாழக்கிழமை தெரிவித்தார்.
இந்த ஜி-20 உச்சிமாநாட்டின் போது, உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான மற்றும் நெகிழ்ச்சியான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான தங்கள் பார்வையைப் பகிர்ந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.