இந்திரா காந்தி பிறந்தநாளில் பிரதமர் புகழாரம்
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளான இன்று, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்தியாஇந்திரா காந்தி பிறந்தநாளில் பிரதமர் புகழாரம்
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளான இன்று, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
புது தில்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளான இன்று, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
பிரதமர் பகிர்ந்துள்ள சுட்டுரைப் பதிவில், “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளான இன்று அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்திரா காந்தி அவர்களுக்கு எனது புகழஞ்சலிகள்” என்று கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 103வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தில்லியில் சக்தி ஸ்தலா எனுமிடத்தில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்கள் பலரும் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும், நாடு முழுவதுமுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் இந்திரா காந்தியின் பிறந்தநாளை கட்சியினரும் தொண்டர்களும் உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர்.
இந்தியாவின் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்படும் இந்திரா காந்தி, நவம்பர் 19, 1917 இல், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு - கமலா நேருவுக்கு மகளாகப் பிறந்தார். நாட்டின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றவர். 1966 - 1977 , 1980- 1984 காலகட்டத்தில் பிரதமராக இருந்த அவர் 1984 அக்டோபர் 31 அன்று படுகொலை செய்யப்பட்டார்.