புகைப்படக் கோப்பிலிருந்து 
இந்தியா

பாகிஸ்தானில் 1,300 ஆண்டுகள் பழமையான இந்து கோயில் கண்டுபிடிப்பு

வடமேற்கு பாகிஸ்தானின் ஸ்வத் மாவட்டத்தில், சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான இந்துக் கோயிலை பாகிஸ்தான் மற்றும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த தொல்லியத்துறை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

PTI


பெஷாவர்: வடமேற்கு பாகிஸ்தானின் ஸ்வாத் மாவட்டத்தில், சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான இந்துக் கோயிலை பாகிஸ்தான் மற்றும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த தொல்லியத்துறை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பரிகோட் குண்டாய் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியின்போது இந்த புராதான கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அகழாய்வுத் துறையின் கைபர் பக்த்ன்க்வா அதிகாரிகள் இது பற்றி கூறுகையில், அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது கடவுள் விஷ்ணுவின் கோயிலாகும்.  இது இந்து சாஹி காலத்தில் அதாவது சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்து சாஹிக்கள் அல்லது காபூல் சாஸிக்களின் ஆட்சி காபூல் பள்ளதாக்கு (கிழக்கு ஆப்கானிஸ்தான்), கந்தாரா (தற்போதைய பாகிஸ்தான்) மற்றும் தற்போதைய வடமேற்கு இந்தியப் பகுதிகளில் நடைபெற்று வந்தது.

இந்த அகழாய்வின் போது தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கோயிலுக்கு அருகே படைநிலைகளும், நேரத்தைக் காட்டும் கோபுரங்களையும் தொல்லியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கோயிலுக்கு அருகே ஒரு நீர்த்தொட்டியை கண்டுபிடித்திருக்கும் தொல்லியல் நிபுணர்கள், இதனை, கோயிலுக்குச் செல்லும் முன் இந்துக்கள் குளிக்கப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.

தொல்லியல் துறை முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இந்த ஸ்வாத் மாவட்டம் இருந்தாலும், இந்து சாஹி காலத்தில் கட்டப்பட்ட பல கட்டட அமைப்புகள் முதல்முறையாக தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை- ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

கிண்டலில் தொடங்கி அழுகையில் முடிவு... உலகக் கோப்பையில் இருந்து ஹங்கேரி வெளியேற்றம்!

நகர் உலா... அனந்திகா!

யுகங்கள் போதாது...நிகிதா சர்மா

கற்பனைகள் கவிபாடும்... சனம் ஜோஷி

SCROLL FOR NEXT