முகப்பு
இந்தியா

டிச.31 வரை மும்பையில் பள்ளிகள் திறப்பு இல்லை

மும்பையில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்டிருக்கும் பள்ளிகள், டிசம்பர் 31 வரை திறக்கப்படாது என்று மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:55 PM
டிச.31 வரை மும்பையில் பள்ளிகள் திறப்பு இல்லை
பகிர்:


மும்பை: மும்பையில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்டிருக்கும் பள்ளிகள், டிசம்பர் 31 வரை திறக்கப்படாது என்று மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அதே வேளையில் மகாராஷ்டிர மாநிலத்தின் இதரப் பகுதிகளில் நவம்பர் 23-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

மகாராஷ்டிர மாநிலத்தில் நவம்பர் 23-ம் தேதி பள்ளிகளைத் திறக்க மாநில அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், மாணவ, மாணவிகளின் நலன் கருதி, மும்பையில் மட்டும் டிசம்பர் 31 வரை பள்ளிகளைத் திறக்க அனுமதியில்லை என்று மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருக்குள் பள்ளிகள், மாநிலம் முழுவதும் மும்பையைத் தவிர்த்துப் பிற பகுதிகளில் வரும் திங்கள்கிழமை திறக்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக 9-ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு மட்டும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் கைப்பட எழுதிக் கொடுக்கும் கடிதம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →