முகப்பு
இந்தியா

உத்தரகண்டில் லால் பகதூர் சாஸ்திரி அகாதமியில் 33 பயிற்சி அதிகாரிகளுக்கு கரோனா

உத்தரகண்டில் லால் பகதூர் சாஸ்திரி அகாதமியில் 33 பயிற்சி அதிகாரிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 21 நவம்பர், 2020 at 5:37 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:25 PM

உத்தரகண்டில் லால் பகதூர் சாஸ்திரி அகாதமியில் 33 பயிற்சி அதிகாரிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உத்தரகண்ட் மாநிலம், டேராடூன் மாவட்டம் முசோரியில் உள்ளது லால் பகதூர் சாஸ்திரி நிர்வாக தேசிய அகாதமி. இங்கு 33 பயிற்சி அதிகாரிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தவும், பாதுகாப்பு காரணம் கருதியும் ஹாஸ்டல் உள்ளிட்டவைகள் தற்காலிமாக மூடப்பட்டது. 

மேலும் நவம்பர் 30 வரை அனைத்து வகுப்புகளும் ஆன்லைனில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகண்டில் நேற்று மட்டும் புதிதாக 512 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யபட்டது. இதையடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 70,205ஆக உயர்ந்துள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.