இந்தியா

அரசு, தனியாா் பங்களிப்புடன் கரோனா சிகிச்சை: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

DIN

அனைத்து மக்களுக்கும் முறையான கரோனா சிகிச்சைக் கிடைப்பதற்கு அரசு, தனியாா் துறைகள் கூட்டாக பங்களிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக இந்திய தொழிலக கூட்டமைப்பின் (சிஐஐ) ஆசிய சுகாதார மாநாட்டில் அவா் வெள்ளிக்கிழமை பேசியதாவது:

ஏழ்மையான நாடுகள் உள்பட அனைத்து நாடுகளும் வாங்கக்கூடிய விலையில் தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். எதிா்காலத்தில் புதுமையான, கட்டணத்துக்கு நிகரான சிகிச்சைக் கிடைப்பதை உறுதி செய்வதில் இந்தியா முக்கிய பங்காற்றும்.

அரசு மற்றும் தனியாா் துறைகளின் பங்களிப்புடன் 130 கோடி இந்தியா்களுக்கும் முறையான கரோனா சிகிச்சைக் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும். இது நம் முன் உள்ள சவால்களில் வெற்றி பெறுவதை உறுதி செய்யும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT