இந்தியா

குறைந்தபட்ச ஆதரவு விலை: பாஜக மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

DIN

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதாக மத்திய அரசு பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
 
பாஜக ஆளும் பல மாநிலங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலையை உற்பத்தி செலவுக்கு கீழே வைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''கறுப்புச் சட்டம் எனும் வேளாண் சட்டத்தை அறிமுகப்படுத்தும்போது, ​​பாஜக  குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிப்போம் என்று கூறயது. இருப்பினும், விவசாயிகளுக்கு எதிரான உத்தரப்பிரதேசத்தின் அடிப்படை யதார்த்தம் மத்திய அரசு பற்றிய உண்மையை வெளிப்படுத்துகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

வேளாண் சட்டங்கள் மூலம் பெருமுதலாளிகளுக்கு மட்டுமே மோடி அரசு உதவி வருகிறது என்றும் விமர்சித்துள்ளார்.

அண்மையில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நவம்பர் 26ஆம் தேதி தேசிய தலைநகரை இணைக்கும் ஐந்து நெடுஞ்சாலைகள் வழியாக விவசாயிகள் பேரணியாகச் சென்று தில்லி செல்ல உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணம்: வெளியானது 2ஆவது கடிதம்

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

SCROLL FOR NEXT