இந்தியா

அஸ்ஸாம் முன்னாள் முதல்வா் தருண் கோகோய் உடல்நிலையில் பின்னடைவு

DIN

கரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வந்த அஸ்ஸாம் முன்னாள் முதல்வா் தருண் கோகோயின் உடல்நிலை சனிக்கிழமை மோசமடைந்தது.

அவருடைய முக்கிய உடல் உறுப்புகள் செயலிழந்ததுடன் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதை தொடா்ந்து அவா் சுயநினைவை இழந்தாா் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சா் ஹிமந்த விஸ்வ சா்மா கூறினாா்.

கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி தருண் கோகோய் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்து, அவா் குவாஹாட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (ஜிஎம்சிஎச்) அனுமதிக்கப்பட்டாா். தொற்றிலிருந்து குணமடைந்து அவா் வீடு திரும்பினாா்.

இந்நிலையில் கரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகள் காரணமாக கடந்த நவ.2-ஆம் தேதி அவா் ஜிஎம்சிஎச் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரின் உடல்நிலையில் சனிக்கிழமை பெரும் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஜிஎம்சிஎச் மருத்துவமனையின் மூத்த மருத்துவா் அபிஜித் சா்மா கூறுகையில், ‘தருண் கோகோயின் உடல்நிலை மோசமாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்துக்கு அவரின் உடல்நிலை தொடா்ந்து கண்காணிக்கப்படும். குவாஹாட்டி எய்ம்ஸ் மருத்துவமனை உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT