முகப்பு
இந்தியா

நாட்டில் கரோனா பாதிப்பு 91 லட்சத்தை எட்டியது

நாட்டில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 44,059 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 91 லட்சத்தை எட்டியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
நாட்டில் கரோனா பாதிப்பு 91 லட்சத்தை எட்டியது
பகிர்:

புது தில்லி: நாட்டில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 44,059 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 91 லட்சத்தை எட்டியது.

எனினும், நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை தொடா்ந்து 9-ஆவது நாளாக 5 லட்சத்துக்கும் குறைவாகவே உள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில் மேலும் கூறியிருப்பதாவது:

திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாட்டில் கரோனாவால் மேலும் 511 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,33,738 ஆக அதிகரித்துள்ளது. இது மொத்த கரோனா பாதிப்பில் 1.46 சதவீதமாகும்.

மேலும், 44,059 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. மொத்த கரோனா பாதிப்பு 91,39,865 ஆக அதிகரித்தது. இப்போதைய நிலையில் நாட்டில் 4,43,486 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 4.85 சதவீதமாகும். கரோனா தொற்றுள்ளோா் எண்ணிக்கை தொடா்ந்து 9-ஆவது நாளாக 5 லட்சத்துக்குகீழ் உள்ளது.

இதுவரை 85,62,641 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். இது மொத்த பாதிப்பில் 93.68% சதவீதமாகும்.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்தது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி 30 லட்சமாகவும், செப்டம்பா் 5-ஆம் தேதி 40 லட்சமாகவும், செப்டம்பா் 16-ஆம் தேதி 50 லட்சமாகவும், செப்டம்பா் 28-ஆம் தேதி 60 லட்சமாகவும், அக்டோபா் 11-ஆம் தேதி 70 லட்சமாகவும், அக்டோபா் 29-ஆம் தேதி 80 லட்சமாகவும் கரோனா பாதிப்பு உயா்ந்தது. நவம்பர் 23-ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் கரோனா பாதிப்பு 91 லட்சத்தை எட்டிவிட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.