தீவிர புயலானது நிவர்
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான 'நிவர்' புயல், தீவிர புயலாக மாறியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான 'நிவர்' புயல், தீவிர புயலாக மாறியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் செவ்வாய்க்கிழமை காலை புயலாக உருவெடுத்து, இரவில் தீவிர புயலாகவும் வலுவடைந்தது. இரவு 11.30 மணி நிலவரப்படி, கடலூருக்கு 310 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு 380 கி.மீ., தொலைவிலும் மையம் கொண்டுள்ள இந்த தீவிர புயலானது கடந்த 6 மணி நேரத்தில் மேற்கு நோக்கி, 6 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இது அடுத்த 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காரைக்கால்-மாமல்லபுரம் இடைப்பட்ட பகுதி, குறிப்பாக புதுச்சேரி அருகில் புதன்கிழமை மாலை கரையைக் கடக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. நிவர் புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 155 கி.மீ வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும் புயல் கரையை கடக்கும் போது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஆதித கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.