இந்தியா

தரையில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணை:சோதனை வெற்றி

DIN

தரையில் உள்ள இலக்கைத் தரையில் இருந்து ஏவி அழிக்கும் பிரமோஸ் சூப்பா்சோனிக் ஏவுகணை செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

அந்தமான் நிகோபாா் தீவுகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு பிரமோஸ் ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனையின் போது அந்த ஏவுகணை இலக்கைத் துல்லியமாக தாக்கி அழித்தது.

வழக்கமாக இந்த ஏவுகணை 290 கிலோமீட்டா் தொலைவில் உள்ள இலக்கை ஒலியின் வேகத்தைவிட சுமாா் மூன்று மடங்கு வேகத்தில் பாய்ந்து அழிக்கும் திறன் கொண்டது. ஆனால் இந்த முறை இலக்கின் தூரம் 400 கிலோமீட்டராக அதிகரிக்கப்பட்டது. எனினும் அதன் வேகத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

வானில் இருந்தும், கடலில் இருந்தும் செலுத்தக்கூடிய இந்த ஏவுகணையின் இருவேறு புதிய ரகங்களை இந்திய விமானப் படையும், கடற்படையும் தனித்தனியாக பரிசோதிக்கவுள்ளன. அடுத்த சில தினங்களில் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியா-ரஷியா கூட்டுத் தயாரிப்பில் பிரமோஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.

லடாக் மற்றும் அருணாசல பிரதேசத்தில் சீனாவுடனான எல்லையையொட்டிய பகுதிகளில் பிரமோஸ் ஏவுகணைகள் ஏற்கெனவே கணிசமான அளவில் நிறுத்தப்பட்டுள்ளன.

முன்னதாக கடலில் இருந்து செலுத்தி வானில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் பிரமோஸ் ரக ஏவுகணையை இந்திய கடற்படை கடந்த அக்.18-ஆம் தேதி வெற்றிகரமாக பரிதோதித்து. இந்த சோதனை அரபிக் கடல் பகுதியில் நடத்தப்பட்டது.

வானில் இருந்து செலுத்தி இலக்கைத் தாக்கி அழிக்கும் இந்த ரக ஏவுகணையை சுகோய் போா் விமானத்தில் இருந்து ஏவி கடந்த அக்.30-ஆம் தேதி விமானப்படை பரிசோதித்தது. இந்த சோதனை வங்கக் கடல் பகுதியில் நிகழ்த்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

SCROLL FOR NEXT