இந்தியா

இந்தியாவின் தேவை ஒரே நாடு ஒரே தேர்தல்: பிரதமர் மோடி

PTI


கேவாடியா; ஒரு சில மாதத்துக்கு ஒரு முறை நாட்டின் ஏதேனும் ஒரு பக்கத்தில் தேர்தல் நடந்து கொண்டிருப்பதால், நாட்டின் மேம்பாட்டுத் திட்டங்கள் பாதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் தற்போதைய தேவை ஒரே நாடு ஒரே தேர்தல் என்று கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் கேவாடியாவில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, தற்போது இந்தியா பயங்கரவாதத்தை புதிய கொள்கை மற்றும் புதிய முறையில் எதிர்கொண்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் பேசிய அவர், மும்பை பயங்கரவாதத் தாக்குதல் என்பது இந்தியா மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலாகும், அதனை நாடு ஒருபோதும் மறக்காது.

நாட்டின் தற்போதைய தேவையாக ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதாக உள்ளது. இது வெறும் விவாதத்துக்குரியதாக மட்டுமல்லாமல், நாட்டின் முக்கியத் தேவையாகவும் உள்ளது என்று கூறியுள்ளார்.

ஒரு சில மாதங்களுக்கு ஒரு முறை நாட்டின் ஏதேனும் ஒரு பகுதியில் தேர்தல் நடந்து கொண்டேயிருக்கிறது. இதனால் நாட்டில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை தீவிரமாக ஆராய்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

கைலாசநாதா் கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம்

டெங்கு கட்டுக்குள் உள்ளது: நலத்துறை நிா்வாகம்

மு.வி.ச. உயா்நிலைப்பள்ளியை தரம் உயா்த்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT