பெங்களூருவில் 35 பேருக்கு மீண்டும் கரோனா; மருத்துவர்கள் அதிர்ச்சி 
இந்தியா

பெங்களூருவில் 35 பேருக்கு மீண்டும் கரோனா; மருத்துவர்கள் அதிர்ச்சி

பெங்களூருவில் உள்ள ஏழு மருத்துவமனைகளில், கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது, மருத்துவப் பணியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ENS


பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ஏழு மருத்துவமனைகளில், கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது, மருத்துவப் பணியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா குறித்த பல்வேறு தகவல்களில், அது ஒருவரை தாக்கினால், மீண்டும் வராது என்ற நம்பிக்கையும் ஒன்று. ஆனால் அது தற்போது மூட நம்பிக்கையாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள 28 அரசு மருத்துவமனைகளில், ஏழு மருத்துவமனைகள் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளன. இந்த 7 மருத்துவமனைகளிலும் இதுவரை 35 பேருக்கு மீண்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

மற்ற 17 மருத்துவமனைகளும், இதுவரை அதுபோன்ற எந்த நோயாளியையும் பார்க்கவில்லை என்றும், அது தொடர்பான எந்த தகவல்களும் இல்லை என்றும் தெரிவித்துள்ளன. 4 மருத்துவமனைகளை தொடர்பு கொள்ள முடியவில்லை.

ஜெயாநகர் அரசு பொது மருத்துவமனைக்கு இதுவரை 10 பேர் மீண்டும் கரோனா பாதித்து வந்ததாகவும், அவர்கள் அனைவருக்கும் தொற்றின் பாதிப்பு தீவிரமாக இருந்ததாகவும், அனைவருக்குமே ஆக்ஸிஜன் சேவை தேவைப்பட்டதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அனைவருமே அருகில் உள்ள நெஞ்சக நோய் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எங்கள் மருத்துவமனைக்கு 7 நோயாளிகள் வந்துள்ளனர். அவர்களுக்கு இரண்டாவது முறையாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு அறிகுறிகள் தீவிரமாக இருந்தது, பாலருக்கும் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது, அதேவேளையில் சிகிச்சை பலனளித்தது. சில நோயாளிகளுக்கு மட்டும் கரோனா தொற்று இரண்டாவது முறை பாதித்ததா அல்லது அவர்களுக்கு நீண்ட காலமாக கரோனா தொற்று இருந்ததா என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என பட்டதாக மருத்துவர் சச்சின் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பொதுவாகவே ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு ஆறு மாதத்துக்குள் மீண்டும் தொற்று பாதிப்பு ஏற்படாது. அதற்குக் காரணம், கரோனா பாதித்தவரின் உடலில் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்திதான். 

அதே வேளையில், மருத்துவமனைக்கு வந்த ஆறு பேருக்கு மீண்டும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஆறு பேருக்கும் முதல் முறை எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், தற்போது மூச்சு விடுவதில் சிரமம், காய்ச்சல், இருமல், நுரையீரல் தொற்று, தசை வலி என பல அறிகுறிகள் தீவிரமாக இருந்தது என்கிறார் ராஜீவ்காந்தி நெஞ்சக நோய் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் சி. நாகராஜ்.

இரண்டாவது முறை கரோனா பாதித்தவர்களின் மாதிரிகள் புணேவில் உள்ள தேசிய தொற்று மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, அங்கு நடத்தப்படும் ஆய்வில், இரண்டாவது முறை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதா அல்லது, ஏற்கனவே இருந்த பாதிப்பின் தொடர்ச்சியா என்று ஆய்வுக்குள்படுத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக மருத்துவர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

ராமையா நினைவு மருத்துவமனையில், மருத்துவ பணியாளர்கள் மூன்று பேருக்கு இரண்டாவது முறையாக கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக வந்ததை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதுபோலவே பிரிஸ்டைன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு மூன்று நோயாளிகளும், விக்டோரியா மருத்துவமனைக்கு 5 நோயாளிகளும் வந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

SCROLL FOR NEXT