இந்தியா

ஜம்மு-காஷ்மீா் மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தல் நிலவரம்

DIN

ஜம்மு-காஷ்மீரின் மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தலில் காலை 11 மணி நிலவரப்படி 22.12 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை யூனியன் பிரதேசமாக அறிவித்தது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில், அந்த யூனியன் பிரதேசத்தில் மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. காலை 11 மணி நிலவரப்படி 22.12 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 

அதில், குப்வாரா 13.492%, பந்திபோரா 17.874%, பாராமுல்லா 12.196% வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் உள்ள 280 இடங்களுக்கு 8 கட்டங்களாக தோ்தல் நடத்தப்படவுள்ளது. 

இதில் 140 இடங்கள் ஜம்முவிலும், எஞ்சிய 140 இடங்கள் காஷ்மீரிலும் உள்ளன. முதல்கட்டமாக ஜம்முவில் 18 இடங்கள், காஷ்மீரில் 25 இடங்கள் என மொத்தம் 43 இடங்களுக்கு வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. 

இதில் ஜம்முவில் 124 வேட்பாளா்கள், காஷ்மீரில் 172 வேட்பாளா்கள் என மொத்தம் 296 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டிலேயே தலைசிறந்து விளங்கும் தமிழக கல்வித்துறை!

மே 20 - ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 49 தொகுதிகள் யார் பக்கம்?

ஆன்மாவை ஆகாயம் சந்தித்த இடத்தில்... ரகுல் பிரீத்...

மீனம்

ஆர்எஸ்எஸ்-ல் இருந்து வந்தேன்; மீண்டும் செல்லத் தயார்: ஓய்வுபெறும் நீதிபதி

SCROLL FOR NEXT