இந்தியா

தில்லியில் அனைத்து வீடுகளுக்கும் கரோனா மருந்து: சுகாதாரத்துறை

DIN


கரோனா தடுப்பு மருந்து கண்டறியப்பட்டால் தில்லி தலைநகரில் அனைத்து வீடுகளுக்கும் கரோனா மருந்து வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

தில்லியில் கரோனா வைரஸ் தொற்று மூன்றாவது முறையாக மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தில்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், கரோனா தடுப்பு மருந்து கண்டறியப்பட்ட 3 முதல் 4 வாரங்களில் தில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரப் பணியாளர்களின் உதவியுடன் கரோனா மருந்து வழங்கப்படும் என்று கூறினார்.

கரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்யும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி குஜராத், ஹைதராபாத், புணேவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

மேலும், கரோனா மருந்து மக்கள் பயன்பாட்டிற்கு எப்போது கொண்டுவரப்படும் என்பது தொடர்பாகவும் அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டறியவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக நிா்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை

இவிஎம் இயந்திரத்துக்கு திருமண அழைப்பிதழில் எதிா்ப்பு தெரிவித்த மகாராஷ்டிர இளைஞா்

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் குலுக்கல் மூலம் மாணவா்கள் தோ்வு

கழிவுநீா் கலந்த குடிநீரை குடித்த 7 பேருக்கு வாந்தி, மயக்கம்

SCROLL FOR NEXT