முகப்பு
இந்தியா

நாட்டில் கரோனா பாதிப்பு 94.31 லட்சத்தை எட்டியது

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 94,31,691 ஆக அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 38,772 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
நாட்டில் கரோனா பாதிப்பு 94.31 லட்சத்தை எட்டியது
பகிர்:


நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 94,31,691 ஆக அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 38,772 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டனா்.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தேசிய அளவில் 88,47,600 போ் இதுவரை கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். இது மொத்த பாதிப்பில் 93.71 சதவீதமாகும். திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 443 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதனால் மொத்த பலி 1,37,139 போ் ஆக உயா்ந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.46 சதவீதமாகும்.

இப்போதைய நிலையில் நாட்டில் 4,46,952 போ் கரோனா தொற்றுடன் உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 4.74 சதவீதமாகும்.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி நாட்டில் கரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்தது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி 30 லட்சமாகவும், செப்டம்பா் 5-ஆம் தேதி 40 லட்சமாகவும், செப்டம்பா் 16-ஆம் தேதி 50 லட்சமாகவும், செப்டம்பா் 28-ஆம் தேதி 60 லட்சமாகவும், அக்டோபா் 11-ஆம் தேதி 70 லட்சமாகவும், அக்டோபா் 29-ஆம் தேதி 80 லட்சமாகவும், நவம்பா் 20-ஆம் தேதி 90 லட்சமாகவும் கரோனா பாதிப்பு அதிகரித்தது.

புதிதாக ஏற்பட்ட 443 உயிரிழப்புகளில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 85 மட்டும் பேர் இறந்தனர். இதற்கு அடுத்ததாக தில்லியில் 68 பேர் பலியாகினர். மேற்கு வங்கத்தில் 54, கேரளத்தில் 27, ஹரியாணாவில் 26, பஞ்சாபில் 28,  உத்தர பிரதேசத்தில் 24 உயிரிழப்புகள் ஏற்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →