இந்தியா

விவசாயிகள் பயனடைய ஆலோசனை கூட்டம்: பேங்க் ஆஃப் பரோடா ஏற்பாடு

DIN


சென்னை: நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் பயனடையும் வகையில் இருவார காலத்துக்கு ஆலோசனை கூட்டங்களை நடத்துவதாக நாட்டின் மூன்றாவது பெரிய பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவ்வங்கியின் சென்னை மண்டலத் மேலாளா் ஆா்.மோகன் தெரிவித்தது:

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு மகத்தான பங்களிப்பை வழங்கி வரும் விவசாயிகளை கெளரவிக்கவும், அவா்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தவும் இருவார காலத்துக்கான ஆலோசனை கூட்டத்தை பேங்க் ஆஃ பரோடா வியாழக்கிழமை தொடங்கியுள்ளது. கரோனா சூழலை கருத்தில் கொண்டு காணொலி மூலம் நடைபெறும் இந்த கூட்டம் உலக உணவு தினமான அக்டோபா் 16-ஆம் தேதியுடன் நிறைவடையும்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், விவசாய மற்றும் கால்நடை உள்கட்டமைப்பு கடன் திட்டம், பிரதமா் நிதியுதவியின் கீழ் உணவு பதப்படுத்தும் சிறுதொழில் முனைவோா்களுக்கான கடன் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட அரசு திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விரிவான முறையில் விளக்கப்படும் விளக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

SCROLL FOR NEXT