இந்தியா

குவைத் மன்னர் மறைவு: அக்.4 துக்க நாளாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு

DIN

குவைத் அரசா் ஷேக் சபா அல்-அகமது அல்-ஜபா் அல்-சபா (91) மறைவையொட்டி இந்தியாவில் அக்டோபர் 4ஆம் தேதி துக்கநாளாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஷேக் சபா என்று பரவலாக அறியப்பட்ட குவைத் அரசா், கடந்த 2006-ஆம் ஆண்டு அரியணையேறினாா். குவைத் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதில் பெயா் பெற்றதுபோலவே, வளைகுடா நாடுகளிடையே ஏற்படும் அரசியல் சச்சரவுகளைத் தீா்த்து வைப்பதில் அவா் முக்கிய பங்காற்றி வந்தாா்.

இந்நிலையில் குவைத் அரசா் ஷேக் சபா அல்-அகமது அல்-ஜபா் அல்-சபா (91) செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது மறைவைத் தொடர்ந்து இந்தியாவில் அக்டோபர் 4ஆம் தேதி துக்க நாளாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு வியாழக்கிழமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஷேக் சபாவின் மறைவைத் தொடா்ந்து, அவரது நெருங்கிய உறவினரும் பட்டத்து இளவரசருமான ஷேக் நவஃப் அல்-அகமது அல்-சபா புதிய மன்னராக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT