முகப்பு
இந்தியா

ஹாத்ரஸ்: இளம் பெண் குடும்பத்தினரைச் சந்தித்தார் ராகுல்

​ஹாத்ரஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) நேரில் சென்று சந்தித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:30 PM
பகிர்:


ஹாத்ரஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) நேரில் சென்று சந்தித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு தாக்குதலுக்குள்ளாகி கடந்த செவ்வாய்க்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் உத்தரப் பிரதேசம் புறப்பட்டனர். ஆனால், உத்தரப் பிரதேச காவல் துறையினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு நாடு முழுவதும் பேசுபொருளானாது.

இதைத் தொடர்ந்து, இன்றும் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க புறப்பட்டனர். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் 5 பேர் மட்டுமே செல்ல உத்தரப் பிரதேச காவல் துறை அனுமதியளித்தது.

இதையடுத்து, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஹாத்ரஸ் புறப்பட்டனர். அங்கு இருவரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்தனர். 

இதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த பிரியங்கா காந்தி, "அவர்களால் பெண்ணை கடைசியாக ஒருமுறை பார்க்க முடியவில்லை. உத்தரப் பிரதேச முதல்வர் அவரது பொறுப்பை உணர வேண்டும். அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்."   

முழு கட்டுரையைப் படிக்க →