முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் மேலும் 1,718 பேருக்கு கரோனா: 8 பேர் பலி

தெலங்கானாவில் சனிக்கிழமை நிலவரப்படி புதிதாக 1,718 பேர் கரோனா கண்டறியப்பட்டுள்ளதாக என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 3 அக்டோபர், 2020 at 11:16 AM
தெலங்கானாவில் கரோனா நிலவரம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:59 PM

தெலங்கானாவில் சனிக்கிழமை நிலவரப்படி புதிதாக 1,718 பேர் கரோனா கண்டறியப்பட்டுள்ளதாக என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

Advertisement

கடந்த 24 மணிநேரத்தில் 1,718 பேர்  கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். 2,002 பேர் குணமடைந்த நிலையில், நோயிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 1,67,846 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் மீட்பு விகிதம் தேசிய சராசரியான 83.8 சதவீதத்திலிருந்து 85.05 சதவீதமாக உயர்ந்தது.

மேலும் ஒரே நாளில்  8 பேர் கரோனாவுக்கு பலியானதை தொடர்ந்து, மொத்த இறப்பு எண்ணிக்கை 1,153 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி, இறப்பு விகிதம் தேசிய சராசரியான 1.6 சதவீதத்திலிருந்து 0.58 சதவீதமாக உள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து தெலங்கானா மாநிலத்தில் 1,97,327 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதில் 28,328 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 

கடந்த இரண்டு நாள்களில் 49,084 மாதிரிகளின் சோதனைகளை நடத்தியுள்ளது. இதன் மூலம் அரசு இதுவரை 31,53,626 மாதிரிகளை பரிசோதித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.