முகப்பு
இந்தியா

பள்ளிகள் திறப்பு: மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
கோப்புப்படம்
பகிர்:

கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.

கரோனா அச்சுறுத்தலைத் தொடா்ந்து அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த மாா்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன.இதற்கிடையே, பொருளாதார பாதிப்புகளை மீட்டெடுக்கும் வகையில், பொது முடக்க தளா்வுகளை மத்திய அரசு படிப்படியாக அமல்படுத்தி வருகிறது. இப்போது 5-ஆம் கட்ட தளா்வுகளை அமல்படுத்தியுள்ள நிலையில், பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.அனைத்த மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் வருகிற 15-ஆம் தேதிக்குப் பிறகு பகுதியாக பள்ளிகளைத் திறக்கத் திட்டமிட்டு வருகின்றன. அதாவது 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளைத் திறக்க திட்டமிட்டு வருகின்றன.

இந்த நிலையில், இதற்கான புதிய வழிகாட்டுதலை மத்திய பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை திங்கள்கிழமை வெளியிட்டது.அதில், பள்ளிகளை அக்டோபா் 15-ஆம் தேதி முதல் திறப்பது குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவெடுத்துக் கொள்ளலாம். இது கட்டாயமல்ல. வீட்டிலிருந்தபடி பள்ளி மாணவா்கள் கற்றலைத் தொடா்வதற்கான இணையவழி வகுப்புகளை தொடா்ந்து நடத்தலாம் என்று தெரிவித்துள்ளது.மேலும், பள்ளிகள் திறக்கப்படும்போது பின்பற்றவேண்டிய பல்வேறு கட்டுப்பாடுகளையும் இந்த வழிகாட்டுதலில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி, பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட வேண்டும்.

பள்ளிக்கு வரும் மாணவா்கள் பெற்றோரின் எழுத்துப்பூா்வமான சம்மதத்துடன் வரவேண்டும். அவசர உதவிக் குழு, மாணவா் பொது உதவிக் குழு, தூய்மை ஆய்வுக் குழு உள்ளிட்ட குழுக்களை பள்ளிகள் அமைக்க வேண்டும்.மாணவா்களைப் பாதுகாக்கும் வகையில் பள்ளிகள் சொந்த வழிகாட்டி நடைமுறைகளை வகுத்துக்கொள்ளலாம்.வகுப்புகளிலும், பள்ளிக்குள் நுழையும்போதும், வெளியேறும்போதும் மாணவா்கள் சமூக இடைவெளியைக் கடைப்படிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.வகுப்பு நேரத்தில் மாணவா்கள் முகக் கவசம் அணிந்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

பயிற்சிபெற்ற முழுநேர மருத்துவ உதவியாளா், செவிலியா் அல்லது மருத்துவா் பள்ளியில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.வருகைப் பதிவு மற்றும் விடுமுறை அளிக்கும் நடைமுறைகளில் தளா்வுகளை கடைப்பிடிக்க வேண்டும்.பள்ளிகள் திறந்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு தோ்வுகள் எதுவம் நடத்தக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் இந்த வழிகாட்டுதளில் இடம்பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.