முகப்பு
இந்தியா

மேற்குவங்கத்தில் பாஜகவினர் மீது காவல்துறை தடியடி: மத்திய அமைச்சர் கண்டனம்

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜகவினர் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:34 PM
கொல்கத்தாவில் கலவரமாக மாறிய பாஜக பேரணி
பகிர்:

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜகவினர் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் மாநில அரசைக் கண்டித்து தலைமை செயலகத்தை நோக்கி நூற்றுக்கணக்கான பாஜகவினர் வியாழக்கிழமை பேரணியில் ஈடுபட்டனர்.  இந்த பேரணிக்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. அனுமதி மீறி பேரணி நடத்திய நிலையில், மேற்குவங்க அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாஜகவினர் சாலையில் டயர்களை தீயிட்டு எரித்தனர். 

மேலும் பேரணி நடத்தியவர்கள் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதால், காவல்துறையினர் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இதில் பாஜக மாநிலத்துணைத்தலைவர் ராஜூ பானர்ஜி உள்பட பலர் படுகாயம் அடைந்தனர். 

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், “கட்சியின் மூத்த தலைவர்கள் மீது மேற்கு வங்க காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான நடத்தையை பாஜக கடுமையாக கண்டிக்கிறது. காவல்துறை மற்றும் லத்திகளைப் பயன்படுத்துவதன் மூலம் பாஜகவின் தடுத்து நிறுத்துவதில் உங்களால் வெற்றி பெற முடியாது.” என தெரிவித்துள்ளார்.

மேலும் காவல்துறை சார்பில் பீய்ச்சியடிக்கப்பட்ட தண்ணீரில் ரசாயனங்கள் கலந்திருப்பதாக ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →