கேரளத்தில் புதிதாக 9,250 பேருக்கு கரோனா
கேரளத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 9,250 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கேரளத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 9,250 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. அந்தவகையில் கேரளத்தில் அதிக அளவிலான கரோனா பாதிப்புகள் பதிவாகி வருகிறது.
இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 9,250 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 1.96 லட்சத்தைக் கடந்துள்ளது.
Advertisement
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 91,756 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றிலிருந்து 1,75,304 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனா தொற்றால் இதுவரை 742 பேர் உயிரிழந்ததாக மாநில சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள 14 மாவட்டங்களில் 20 சதவிகித கரோனா பாதிப்பு கூடுதலாக பதிவாகியுள்ளது. கேரளத்தில் 10 மாவட்டங்களில் 8 மாவட்டங்கள் கடந்த ஒரு வாரத்தில் கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.