முகப்பு
இந்தியா

'விவசாயத்தைப் பற்றி ராகுல்காந்திக்கு ஒன்றும் தெரியாது'

விவசாயத்தைப் பற்றி ராகுல்காந்திக்கு ஒன்றும் தெரியாது என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் விமர்சித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:35 PM
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான்
பகிர்:

விவசாயத்தைப் பற்றி ராகுல்காந்திக்கு ஒன்றும் தெரியாது என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் விமர்சித்துள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ் சிங் செளகான், ''முன்னாள் முதல்வர் கமல்நாத் முழு மத்திய பிரதேசத்தையும் ஊழல் மற்றும் இடைத்தரகர்களின் மையமாக மாற்றிவிட்டார். கமல்நாத் ஆட்சியில் கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகள் கடுமையாக ஏமாற்றப்பட்டனர்.

மேலும் விவசாயிகளுக்காக செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட ரூ.6000 கோடியையும் முழுமையாக முந்தைய அரசு செலுத்தவில்லை.  மேலும், விவசாயிகளுக்காக பா.ஜ.க. அரசு முன்பு கொண்டுவந்த அனைத்து திட்டங்களும் காங்கிரஸ் ஆட்சியில் முடக்கப்பட்டது'' என்று கூறினார்.

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி குறித்து பேசிய அவர், ''ராகுல்காந்திக்கு விவசாயம் பற்றி ஒன்றும் தெரியாது. விவசாய டிராக்டரில் அமர்ந்து கொண்டு நகர்வலம் வருவதற்கு மட்டுமே அவருக்குத் தெரியும்.

வெங்காயம் பூமிக்கு அடியில் விளைகிறதா? பூமிக்கு மேலே விளைகிறதா என்ற அளவிற்கு கூட அவருக்கு விவசாயத்தைப் பற்றித் தெரியாது'' என்று விமர்சித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.