நாட்டில் இதுவரை 8.57 கோடி கரோனா பரிசோதனைகள்: ஐசிஎம்ஆர்
நாட்டில் இதுவரை 8.57 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
புதுதில்லி: நாட்டில் இதுவரை 8.57 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 69 லட்சத்து 79 ஆயிரத்து 424 ஆக உயர்ந்துள்ளது. சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 73,272 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் கரோனா பரிசோதனைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அந்தவகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 11,64,018 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதனால் மொத்த கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 8,57,98,698-ஆக அதிகரித்துள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா தொற்று பாதித்தவர்களை மீட்பதில் அதிவேக வளர்ச்சியைக் கண்டு வருகிறது. மே மாதத்தில் 50,000 இருந்த மீட்பு எண்ணிக்கை அக்டோபர் 9 ஆம் தேதி வரை 59 லட்சமாக அதிகரித்துள்ளது.
இதுவரை 59,88,823 போ் கரோனா தொற்றில் இருந்து விடுபட்டுள்ளனா். நேற்று ஒரே நாளில் 82,753 பேர் தொற்றில் இருந்து விடுப்பட்டுள்ளனர். இது மொத்த பாதிப்பில் 85.81 சதவீதமாகும்.
இப்போதைய நிலையில் 8,83,185 போ் நாட்டில் கரோனா பாதிப்புடன் உள்ளனா். இது 12.65 சதவீதமாகும். சுமாா் ஒரு மாதத்துக்குப் பிறகு நாட்டில் கரோனா தொற்றுடன் இருப்போா் எண்ணிக்கை 9 லட்சத்துக்குகீழ் குறைந்துள்ளது.