ஹாத்ரஸ் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு அறிவிக்கை வெளியிட்டது மத்திய அரசு
ஹாத்ரஸ் வழக்கை சிபிஐ விசாரிப்பதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வழங்கியுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
ஹாத்ரஸ் வழக்கை சிபிஐ விசாரிப்பதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வழங்கியுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தாக்குதலுக்குள்ளானார். இதையடுத்து, அந்த இளம் பெண் செப்டம்பர் 29-ம் தேதி சிகிச்சைப் பலனின்றி தில்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்குத் தெரியாமல் இரவோடு இரவாக இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன.
இதையடுத்து, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி பரிந்துரைத்தார். இந்த வழக்கு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டது.