பிகார் தேர்தல்: நட்சத்திர பரப்புரையாளர்களின் பட்டியல்
ஒரு கட்சியின் நட்சத்திர பரப்புரையாளர்கள் என்ற பட்டியலில் இடம்பெறும் தலைவர்களின் எண்ணிக்கையை குறைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாபிகார் தேர்தல்: நட்சத்திர பரப்புரையாளர்களின் பட்டியல்
ஒரு கட்சியின் நட்சத்திர பரப்புரையாளர்கள் என்ற பட்டியலில் இடம்பெறும் தலைவர்களின் எண்ணிக்கையை குறைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பாட்னா: பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிகார் முதல்வர் நிதிஷ் குமார், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோரின் பெயர்கள் அவரவர் கட்சிகளின் நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
அதேவேளையில், ஒரு கட்சியின் நட்சத்திர பரப்புரையாளர்கள் என்ற பட்டியலில் இடம்பெறும் தலைவர்களின் எண்ணிக்கையை குறைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் தரப்பில் 30 நட்சத்திர பரப்புரையாளர்களும், அங்கீகாரம் பெறாத கட்சிகளின் தரப்பில் 20 நட்சத்திர பரப்புரையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படும் என்று கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சய் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, இது அனைத்துக் கட்சியினருக்கும் 40 நட்சத்திர பரப்புரையாளர்கள் என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவை இடைத்தோ்தலின்போது, அரசியல் கட்சிகளால் களமிறக்கப்படும் நட்சத்திர பரப்புரையாளா்களுக்கு புதிய கட்டுப்பாடுகளையும் இந்திய தோ்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.
நட்சத்திர பரப்புரையாளா்கள் பரப்புரை செய்வதற்கு ஏதுவாக, பரப்புரைக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக மாவட்ட தோ்தல் அதிகாரியின் முன் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அப்போதுதான் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வசதியாக இருக்கும் என இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக தரப்பில் நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியலில் மோடியும், அமித் ஷாவும் முதலிடத்தில் உள்ளனர், ஐக்கிய ஜனதா தளம் தரப்பில் நிதிஷ் குமார் நட்சத்திர வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.