இந்தியா

காற்று மாசைக் கட்டுப்படுத்தாமல் மத்திய அரசு மெத்தனம்: தில்லி துணை முதல்வர்

DIN

வடமாநிலங்களில் காற்றை மாசைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம்சாட்டியுள்ளார்.

நாட்டின் தலைநகர் தில்லியில் காற்று மாசு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனால் தில்லியில் டீசல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது, கட்டுமானத் திட்டங்களில் தூசி மேலாண்மையை உறுதி செய்வது, தொழிற்சாலைகளில் எரிவாயு பயன்பாட்டை கண்காணிப்பது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும்  உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு ஆணையம் வகுத்துள்ள காற்று மாசு தடுப்பு நடவடிக்கைகள் (கிராப்) தில்லியில் அக்டோபா் 15 முதல் அமலுக்கு வருகிறது. 

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வட மாநிலங்களில் காற்று மாசைக் கட்டுப்படுத்தாமல் மத்திய அரசு மெத்தனம் காட்டிவருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மாசுக் கட்டுப்பாடு தில்லிக்கு உண்டான சிக்கல் மட்டுமல்ல. வடமாநிலங்கள் முழுவதும் காற்று மாசுபாட்டை சந்தித்து வருகின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய மத்திய அரசு அலட்சியமாக உள்ளது. என அவர் தெரிவித்தார்.

மேலும்,   “இதுவரை எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாத மத்திய அரசு தற்போது அவசர அவசரமாக கூட்டம் போடுகிறது. வட இந்தியாவில் மாசுபாட்டைக் குறைக்க அவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.” என சிசோடியா விமர்சித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT