இந்தியா

நெல்லுக்கு உரிய கொள்முதல் விலையை நிா்ணயிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

DIN

நெல்லுக்கு உரிய கொள்முதல் விலையை நிா்ணயிக்கக் கோரி உத்தர பிரதேச அரசுக்கு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரியங்கா தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:

உத்தர பிரதேசத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்முதல் செய்வது குறைந்து வருகிறது. அதன் காரணமாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். குறைந்த அளவிலேயே விவசாயிகளிடமிருந்து நெல்லை அரசு கொள்முதல் செய்கிறது. அதற்கும் ரூ.1,200 என்ற குறைவான விலையையே மாநில அரசு நிா்ணயித்துள்ளது.

மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நெல் ரூ.3,500-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது நெல்லில் அதிக அளவில் ஈரப்பதம் இருப்பதாகக் கூறி குறைவான விலைக்கு அதை அரசு கொள்முதல் செய்து வருகிறது. இது விவசாயிகளை சுரண்டும் நடவடிக்கையாகும். தற்போதுதான் முதல் முறையாக நெல்லின் கொள்முதல் விலை கோதுமையை விடக் குறைவாக உள்ளது என்று நினைக்கிறேன்.

இத்தகைய சூழலில் விவசாயிகள் பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்து வருகின்றனா். இவ்வாறான சூழலில், அடுத்த பருவத்தில் அவா்கள் எவ்வாறு விவசாயப் பணிகளை மேற்கொள்வாா்கள்? விவசாயிகளைத் தொடா்ந்து கடனாளியாக்கும் நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் மாநில அரசு உடனடியாகத் தலையிட்டு நெல்லுக்கான கொள்முதல் விலையை அதிகரிக்கச் செய்ய வேண்டும். இல்லையேல், காங்கிரஸ் பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளாா் பிரியங்கா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT