கேரள தங்கக் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷுக்கு ஜாமீன்
கேரளத் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷுக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இந்தியாகேரள தங்கக் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷுக்கு ஜாமீன்
கேரளத் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷுக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கேரளத் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷுக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அந்நாட்டின் துணைத் தூதரகத்துக்கு கடந்த 5-ஆம் தேதி வந்த பாா்சலில் ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டதை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக, தேசியப் புலனாய்வு அமைப்பினா் வழக்குப்பதிவு செய்து, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்கெனவே பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயா் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
இதுதொடா்பாக தேசிய புலனாய்வு முகமை, சுங்கத்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் பதிவு செய்த ஸ்வப்னா சுரேஷ் மீதான வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் ஸ்வப்னா சுரேஷுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனினும் சுங்கத்துறையினரும் ஸ்வப்னா சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதால் அவர் சிறையில் இருந்து வெளிவர முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.