திருநங்கைகள் பங்களிப்புடன் பெங்களூரு மெட்ரோ நிலையச் சுவர்களைப் புதுப்பித்த நிப்பான் பெயிண்ட்
பெங்களூரூவில் சுவாமி விவேகானந்தா மெட்ரோ ரயில் நிலையத்தின் சுவர்களைத் திருநங்கைகளின் பங்களிப்புடன் புதுப்பித்திருக்கிறது நிப்பான் பெயிண்ட் நிறுவனம்.
இந்தியாதிருநங்கைகள் பங்களிப்புடன் பெங்களூரு மெட்ரோ நிலையச் சுவர்களைப் புதுப்பித்த நிப்பான் பெயிண்ட்
பெங்களூரூவில் சுவாமி விவேகானந்தா மெட்ரோ ரயில் நிலையத்தின் சுவர்களைத் திருநங்கைகளின் பங்களிப்புடன் புதுப்பித்திருக்கிறது நிப்பான் பெயிண்ட் நிறுவனம்.
பெங்களூரூவில் சுவாமி விவேகானந்தா மெட்ரோ ரயில் நிலையத்தின் சுவர்களைத் திருநங்கைகளின் பங்களிப்புடன் புதுப்பித்திருக்கிறது நிப்பான் பெயிண்ட் நிறுவனம்.
பிரபல முன்னணி பெயிண்ட் உற்பத்தியாளர்களான நிப்பான் பெயிண்ட் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனம், பெங்களூருவில் அரவானி கலைத் திட்டத்தின் உறுப்பினர்களுடன் இணைந்து சுவாமி விவேகானந்தா மெட்ரோ ரயில் நிலையத்தின் பாழடைந்த சுவர்களை வெற்றிகரமாகப் புதுப்பித்து முடித்துள்ளனர்.
தொற்றுநோய்க் காலத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்காகப் பணியாற்றும் கரோனா முன்களப் பணியாளர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக இந்த முயற்சியை எடுத்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
கரோனா பரவலுக்கு இடையிலும், 4,000 சதுர அடி சுவர் பரப்பளவில் சுகாதாரத் துறை சார்ந்த உணர்வுகளை சுவரோவியங்களாகத் தீட்டியுள்ளனர்.
பல தன்னார்வலர்கள் முன்வந்ததை அடுத்து, நிப்பான் பெயிண்ட் இந்த முயற்சியை முன்னெடுத்ததாக கர்நாடக விற்பனை பிரிவு மேலாளர் பதசல்கி வினய் ஜெயதீர்த்தி தெரிவித்தார்.
மெட்ரோ நிலையத்தை அழகுபடுத்தும் இந்தப் பணிக்காக சுமார் 120 லிட்டர் பெயிண்ட் வழங்கப்பட்டது. மேலும், வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்ட திருநங்கைகளுக்குத் தேவையான பாதுகாப்பு சாதனங்களும் வழங்கப்பட்டன என்று கூறினார்.
இதுகுறித்து நிப்பான் பெயிண்ட் (அழகூட்டல்) தலைவர் எஸ். மகேஷ் ஆனந்த் கூறுகையில், 'கரோனா தொற்றுநோய்க் காலத்தில் மக்கள் பணியாற்றும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்பட முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் நாங்கள் மரியாதை செலுத்துகிறோம். ஏனெனில் மக்களைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளனர்.
இதுபோன்ற இக்கட்டான காலங்களில் அவர்களின் சேவைகளுக்கு எங்கள் ஊக்கத்தையும் அங்கீகாரத்தையும் வழங்குவதற்கான ஒரு முயற்சியே இது. இந்த முயற்சியில் எங்களுடன் பணியாற்ற அரவானி கலைத் திட்டத்திலிருந்து திருநங்கைகளும் இணைந்துகொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
இது அவர்களின் கலைத் திறன்களை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இவர்களின் ஓவியங்கள் மனதைக் கவர்வனவாக உள்ளன. சமூகத்தில் கலையை வெளிப்படுத்த இதுபோன்ற முயற்சிகள் உதவும் என்றார்.
ஜப்பானில் நிறுவப்பட்ட நிப்பான் பெயிண்ட் நிறுவனம் 140 ஆண்டுகளாக பெயிண்ட் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக உள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பெயிண்ட் உற்பத்தியில் முதலிடத்திலும், உலக அளவில் முன்னணி நிறுவனமாகவும் நிப்பான் பெயிண்ட் உள்ளது.